திருப்பூர்

மனை வரன்முறை: ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செப்டம்பர் 14இல் சிறப்பு முகாம்

DIN

அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் வாங்கியுள்ள தனி மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செப்டம்பர் 14ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: 
அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் வாங்கியுள்ள தனி மனைகளை வரன்முறைப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே விண்ணப்பித்து மனுதாரர்களும், இதுவரை விண்ணப்பிக்காத மனை உரிமையாளர்களும் பயன் பெறும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.  
அதன்படி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட (அ.பெரியபாளையம், எ.பெரியபாளையம் ஊராட்சித் தவிர) ஊத்துக்குளி பேரூராட்சி, குன்னத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே உள்ள ஒன்றிய அலுவலகத் திருமண மண்டபத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 
அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் மனைக் கிரயம் பெற்று வரன்முறை செய்ய நகர் ஊரமைப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு  செய்தவர்கள் தங்களது இணையதளப் பதிவு ஒப்புகை நகலுடன் இணையதளப் பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளரின் புகைப்பட அடையாளச் சான்று, மனைப் பிரிவு வரைபடம் அதில் மனை குறித்த வரைபடம், விற்பனை ஆவணம், மனை உரிமையாளர் பெயரில் அமையும் வருவாய்த் துறை அல்லது மனை விற்றவர் பெயரில்  அமையும் ஆவணங்கள் (புலப் படம், பட்டா, சிட்டா), மனை கிரையம் பெற்றதில் இருந்து விண்ணப்ப நாள்  வரையிலான இணையதள வில்லங்கச் சான்று ஆகிய ஆவணங்களை இம்முகாமுக்கு வரும்போது பரிசீலனைக்கு எடுத்துவர வேண்டும்.
முகாம் நடைபெறும் இடத்திலேயே மனுதாரர்கள் செலுத்த வேண்டிய  கட்டணங்களை நேரிடையாக செலுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் கூராய்வுக் கட்டணம் ரூ. 500ஐ இணையதளம் மூலமாகச் செலுத்தவேண்டும். மாநகராட்சிப் பகுதியில் அமையும் மனைகளுக்கு வரன்முறைக்  கட்டணமாக ஒரு சதுர மீட்டர் மனைப் பரப்புக்கு ரூ. 100, வளர்ச்சிக் கட்டணமாக ரூ. 500 மற்றும் ஊராட்சிப் பகுதிக்கு வரன்முறைக் கட்டணமாக  ரூ. 30, வளர்ச்சிக் கட்டணமாக ரூ. 25 வீதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT