திருப்பூர்

மூலனூரில் ரூ.25 லட்சத்துக்கு  பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 லட்சத்துக்குப் பருத்தி விற்பனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர், திண்டுக்கல், மாவட்டங்களைச் சேர்ந்த 122 விவசாயிகள் 1,328 மூட்டைகளில் தங்களுடைய பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
திருப்பூர், பல்லடம், அன்னூர், சோமனூர், சூலூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து 9 வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் தர்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
குவிண்டால் ரூ. 4,500 முதல் 6,710 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.5,700. மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT