திருப்பூர்

உடுமலை நாராயணகவி பிறந்த நாள்: மாணவர்களுக்கு திறனறி போட்டிகள்

DIN

உடுமலை நாராயணகவி பிறந்த நாளை ஒட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு திறனறிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண் 2 சார்பில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இந்தப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவியின் சமூக நீதி, திரைப்படத் துறையில் உடுமலை நாராயணகவியின் பாடல்களில் பகுத்தறிவு என்கிற தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளன. 
மாணவர்கள் போட்டிக்கான கட்டுரைகளை செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண்-2 ல் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நூலகத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணி அளவில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. 
பேச்சுப் போட்டியில் பங்கேற்க 04252-222619 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம். போட்டி முடிவுகள் செப்டம்பர் 25ஆம் 
தேதி நடக்கும் விழாவில் அறிவிக்கப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT