திருப்பூர்

கரூர் - கோவை சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

DIN


கரூர் - கோவை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தி கொங்கு மண்டல விவசாயிகள் சார்பில் கவன ஈர்ப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வழுக்குபாறை பாலு தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தற்போதுள்ள கரூர் - கோவை வரையிலான சாலையை விரிவாக்கம் செய்தால் விளைநிலங்கள் பாதுகாக்கப்படுவதோடு திட்ட செலவும் குறைந்து 53 கி.மீ. பயண தூரம் குறையும்.
இச்சாலையின் வழியே செல்லும் பல்லடம் - கொச்சி சாலையை 3 கி.மீ. தொலைவு விரிவாக்கம் செய்யலாம். எல்.அண்ட் டி புறவழிச் சாலையும் இந்த சாலை வழித்தடத்தில் இணைவதால் இச்சாலையை அனைத்து சாலைகளுடன் இணைக்கலாம்.
கருமத்தம்பட்டி - கிட்டாம்பாளையம் சாலையை சத்தி சாலை வரையும், சத்தி சாலையை மேட்டுப்பாளையம் சாலை வரையும் 12 வழித் தடங்களில் கீரணத்தம் வழியாக பெரியநாயக்கன்பாளையம் செல்லும் வழித்தடத்தையும் விரிவாக்கம் செய்தால் ஒட்டு மொத்த இழப்புகளையும் தவிர்த்து குறைந்த திட்ட செலவில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு இன்றி சாலை விரிவாக்க திட்டத்தை நிறைவேற்றிட முடியும் என்று விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் கே.செல்லமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் பிரிவுத் தலைவர் சு.பழனிசாமி, கோவை மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கட்சி சார்பாற்ற தமிழக விவசாயிகள் சங்கப் பொருளாளர் மருத்துவர் தங்கராஜ், பி.ஏ.பி.விவசாயிகள் பாசன சபை தலைவர் டி.கோபால், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT