திருப்பூர்

சாதனைகளைக் கூறி வாக்குகள் சேகரிக்கிறோம்: அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிக்கிறோம் என்று

DIN

மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சாதனைகளைக் கூறி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிக்கிறோம் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து உடுமலை நகரில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது:
பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் தலா ரூ. ஆயிரம் வழங்கப்பட்டது. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்க அதிமுக அரசு உத்தரவிட்டது. ஆனால், திமுகவினர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்குத் தடை வாங்கிவிட்டனர். ஆகையால், அந்தத் தொகையை வழங்க முடியவில்லை. மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உடனடியாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பொள்ளாச்சித் தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றார்.
 உடுமலை நகரின் மேற்கு பகுதியில் உள்ள 13 ,14 வார்டுகளில் பொதுமக்களிடம் அமைச்சர் வாக்குகள் சேகரித்தார். 
மாவட்ட  இளைஞர், இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் எம்.எஸ்.காளீஸ்வரன், நகர நிர்வாகிகள் ஹக்கீம், மணிவிலாஸ் பொன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT