திருப்பூர்

வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

DIN

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டப்பேரவைக்கு உள்பட்ட 120 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள 293 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 
இந்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இருந்த அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது உடுமலை கோட்டாட்சியர் அசோகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மகாராஜன், வட்டாட்சியர்கள் தங்கவேல் (உடுமலைப்பேட்டை), பழனியம்மாள் (மடத்துக்குளம்)  மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT