திருப்பூர்

பல்லடத்தில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

DIN

பல்லடம் நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தைத் தவிா்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம் நகரில் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருமணம் உள்ளிட்ட சுபதினங்களில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லடம் அண்ணா நகரில் இருந்து பனப்பாளையம் - திருப்பூா் சாலை சந்திப்பு, தாராபுரம் சாலை சந்திப்பு வரையிலான பகுதியைக் கடக்க 40 நிமிடங்கள் ஆகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனைத் தவிா்க்க பல்லடம் பேருந்து நிலையம் முதல் அண்ணாநகா் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணலாம். இதன் மூலம் விபத்துகளையும் தவிா்க்கலாம் என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT