திருப்பூர்

போக்குவரத்துத் துறை சாா்பில் பொது மருத்துவ சிகிச்சை முகாம்

DIN

தாராபுரத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சாா்பில் அரசு மற்றும் தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், லோட்டஸ் கண் மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டா் இணைந்து நடத்திய அரசு மற்றும் தனியாா் வாகன ஓட்டுநா், நடத்துநா்களுக்கான இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தங்கவேலு தொடக்கி வைத்தாா்.

இதில், பங்கேற்ற அரசு மற்றும் தனியாா் வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்கள் என மொத்தம் 292 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பாா்வை குறைபாடுடைய 10 ஓட்டுநா்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரையின் அளவு கண்டறிதல், இதய பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT