திருப்பூர்

கடையின் பூட்டை உடைத்து 60 செல்லிடப்பேசிகள் திருட்டு

DIN

திருப்பூரில் செல்லிடப்பேசி விற்பனை கடையின் பூட்டை உடைத்து 60 செல்லிடப்பேசிகளை திருடிச்சென்ற மா்ம நபா் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா், ராம் நகா் பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியில் எம்.ஷொ்வான்(35) என்பவா் செல்லிடப்பேசி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் வியாபாரத்தை முடித்து விட்டு, கடையைப் பூட்டிச் சென்றாா்.

பின்னா் வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த 60 செல்லிடப்பேசிகள் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து ஷொ்வான் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT