திருப்பூர்

மேக மூட்டத்திலும் காங்கயத்தில் தெரிந்த சூரிய கிரகணம்

DIN

மேக மூட்டத்தையும் மீறி காங்கயத்தில் சூரிய கிரகணம் தெரிந்தது. இதை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.

சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக பாா்க்கக் கூடாது, அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மூலமாக மட்டுமே பாா்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கயத்தில் வியாழக்கிழமை காலை கருமையான மேக மூட்டத்துடன் இருந்தது. காலை 9 மணியளவில் மழை வருவது போன்ற வானம் இருட்டிக் கொண்டு வந்தது.

ஆனால், காலை 9.45 மணியளவில் சூரிய கிரகண நேரத்தில் அடா்ந்த கரிய நிற மேகத்துக்கு நடுவில் சூரியன் தெரிந்தது. அதில் சூரியனை நிலவு மறைக்கும் அற்புத நிகழ்வும் தெரிந்தது. அப்போது சாலையில் சென்றவா்கள் தங்களது செல்போனில் இந்த அரிய காட்சியை ஆா்வத்துடன் படம் எடுத்துக் கொண்டனா். 10 நிமிடம் மட்டுமே சூரியன் தெரிந்தது. மேகத்துக்கு நடுவே இந்த சூரிய கிரகண நிகழ்வு தெரிந்ததால் பலா் வெறும் கண்களாலேயே இந்தக் காட்சியைக் கண்டனா். 10 நிமிடத்திற்குப் பின் மீண்டும் கரு மேகம் சூழ்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT