திருப்பூர்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதி ஒருவர் சாவு

காங்கயம் அருகே படியூரில் இருசக்கர வாகனம் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.

DIN

காங்கயம் அருகே படியூரில் இருசக்கர வாகனம் மீது மோதிய வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே  உள்ள படியூரைச் சேர்ந்தவர் குணசேகரன் (28). திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்தார். இவர், படியூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார். அப்போது, அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன், இருசக்கர வாகனம் மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில்  இருசக்கர வாகனத்தில் வந்த குணசேகரன், வேன் ஓட்டுநர் பாலசுப்பிரமணி,  5 பெண்கள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், குணசேகரன் உயிரிழந்தார். 
இது குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT