திருப்பூர்

காங்கயத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

DIN

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெங்கு ஜி.மணிமாறன் அறிமுகக் கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சென்னிமலை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அதிமுக ஈரோடு மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார்.
திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, ஈரோடு மக்களவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வேட்பாளர் வெங்கு மணிமாறனை அறிமுகப்படுத்தி, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.  முன்னதாக முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பு கடித்து பழங்குடியின இளைஞா் காயம்

கஞ்சா விற்றதாக பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது

கிருஷ்ணகிரியில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்-புவனேஸ்வா் ரயிலில் கூடுதல் பெட்டி

பைக்கில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மாயம்

SCROLL FOR NEXT