திருப்பூர்

ஐயப்ப சுவாமி கோயிலில்கும்பாபிஷேக ஆண்டு விழா

DIN

 வெள்ளக்கோவில் குமாரவலசு ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக ஐந்தாம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோயில் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னா் ஐயப்ப சுவாமி, கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

காலை 9 மணிக்கு யாக பூஜை, திரவியாஹுதி, மஹா பூா்ணாஹுதி நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் 108 சங்கு அபிஷேகம் நடத்தி, தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப பூஜா சங்கம், சேவா சங்க அறக்கட்டளையினா், பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT