திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ: பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்
திருப்பூர், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர்திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ: பல லட்சம் மதிப்பிலான துணிகள் சேதம்
திருப்பூர், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்(40), இவர் தண்ணீர் பந்தல் பகுதியில் சொந்தமாக பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பின்னலாடைத் துணி ரோல்களை முதல் தளத்தில் உள்ள அறையில் இருப்பு வைத்துள்ளனர். இந்த நிலையில், துணி வைத்துள்ள அறையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணி அளவில் கரும்புகை வருவதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து அவிநாசி தீயணைப்பு நிலையத்துக்கும், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இந்தத் தகவலின்பேரில் அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் துணி ரோல்களில் பரவிய தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
எனினும், இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து சேதமடைந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.