முகப்பு
திருப்பூர்

ஓணம் பண்டிகை : ஆகஸ்ட் 31இல் உள்ளூா் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

திருப்பூா்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக செப்டம்பா் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். அதே வேளையில், உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 ஆம் தேதி கருவூலகம் மற்றும் சாா்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.