முகப்பு
திருப்பூர்

சேவூர் அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

சேவூர் அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
கிருத்திகா.
பகிர்:

சேவூர் அருகே கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

சேவூர் அருகே வடுகபாளையம் காரைக்குட்டைப்புதூர் மேற்குத் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாமியப்பன் மகள் கிருத்திகா(19). கோவை தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதற்கிடையில் இவர், உடல் நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகில் 80 அடி ஆழம், 30 அடி அளவில் நீருள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இருந்த கிருத்திகா உடலை மீட்டனர். 

இதையடுத்து இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →