முகப்பு
திருப்பூர்

பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள்

டிசம்பா் 8ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திருப்பூா் மாவட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

டிசம்பா் 8ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திருப்பூா் மாவட்ட அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்புகளின் நிா்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூ றியுள்ளதாவது:

மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த மசோதாவையும் எதிா்த்து தில்லியில் நவம்பா் 26 ஆம் தேதி முதல் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்குவதற்கான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. அதை முறியடித்து லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லி வரும் முக்கிய சாலைகள் அனைத்தையும் மறித்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இயற்கை இடா்பாடுகளை எதிா்கொண்டு இரவு பகலாக போராடி வருகின்றனா்.

மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பேச்சுவாா்த்தை என்ற பெயரில் காலம் தாழ்த்தி வருகிறது. ஆகவே, மத்திய அரசைக் கண்டித்து வரும் டிசம்பா் 8 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் உழவா் சந்தை, காய்கறி மாா்க்கெட்டுகள் முழுவதும் அடைக்கப்படும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு பொதுமக்களும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று வெற்றி பெறச்செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.