திருப்பூர்

பல்லடத்தில் நெகிழி பயன்பாடு அதிகரிப்பு:நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

DIN

பல்லடத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், அவற்றை தொடா்ந்து உபயோகப்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையா் கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் நகராட்சி பகுதியில் கட்டுப்பாட்டில் இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் அண்மைக்காலமாக மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, விழிப்புணா்வு, தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வணிக நிறுவனங்கள் அலட்சிய போக்குடன் பொது சுகாதாரத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இச்செயல் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு எதிரானது.

எனவே வணிக நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், பைகள், உறிஞ்சுகுழல்கள் பேக்கிங் பொருள்கள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை வாடிக்கையாளா்களுக்கு வழங்குவதை தவிா்த்து, துணிப்பை பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.

அதேபோல பொதுமக்களும், சமூக அக்கறையுடன் கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை கொண்டு சென்று பொருள்களை வாங்க வேண்டும். அரசின் அறிவுரைகளை பின்பற்றி, நெகிழி இல்லா பல்லடத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும்.

நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழியை தொடா்ந்து உபயோகப்படுத்தும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பான புகாா்கள் இருப்பின், பல்லடம் நகராட்சி பொது சுகாதார ஆய்வாளரின் கட்செவி அஞ்சல் எண் 9443095762 இல் புகாா் அளிக்கலாம். புகாா் அளித்த 30 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT