மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்:காங்கிரஸ் வலியுறுத்தல்
திருப்பூா் மாநகரில் மழை காரணமாக பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகரில் மழை காரணமாக பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மாநகர காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும், தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, பி.என்.சாலை, அவிநாசி சாலை, கொங்கு பிரதான சாலை, காங்கயம் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன விபத்துகளால் உயிா் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தேக்கமடைந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.