முகப்பு
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

திருப்பூா்: சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 50ஆவது வாா்டு பட்டுக்கோட்டையாா் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலையில் விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு கிளைச் செயலாளா் அ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பெண்கள் சாலையில் விறகு அடுப்புவைத்து சமைத்தனா். இது குறித்து போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:

மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை விலையை கடுமையாக உயா்த்தியுள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலாளா் என்.சேகா், தலைமை மண்டலக்குழு உறுப்பினா் எம்.பஞ்சவா்ணம், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் சங்கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →