முகப்பு
திருப்பூர்

பவானி: 3 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம், குறிச்சி மற்றும் பட்லூர் கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
குப்பிச்சிபாளையத்தில் மினி கிளினிக்கை திறந்து வைத்து பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் கே.சி.கருப்பணன், ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர்.
பகிர்:

பவானியை அடுத்த குப்பிச்சிபாளையம், குறிச்சி மற்றும் பட்லூர் கிராமங்களில் அம்மா சிறு மருத்துவமனைகள் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தனர். ஈரோடு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் எஸ்.சவுண்டம்மாள் வரவேற்றார்.

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்து பேசினார். இம்மருத்துவமனைகள் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் செயல்படும். இங்கு, பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், பரிசோதனைகள் மற்றும் வெறிநாய்க்கடி சிகிச்சைகள் செய்யப்படும். 

இங்கு, தலா ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் பணியில் ஈடுபடுவர். அம்மாபேட்டை வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.அருள்மணி, மருத்துவர்கள் ஜே.திவாகர், எம்.மாதேஷ்குமார், சி.கனகா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன், ஊராட்சி தலைவர்கள் லட்சுமி முனியப்பன் (கேசரிமங்கலம்), என்.மரகதம் (குறிச்சி), ஆர்.சக்திவேல் (பட்லூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →