வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்பு
வெள்ளக்கோவில் அருகே திங்கள்கிழமை கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில் அருகே திங்கள்கிழமை கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி உயிருடன் மீட்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலை, குட்டக்காடு பிரிவு அருகிலுள்ள காலியிடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர் தன்னுடைய கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது கன்றுக்குட்டி தவறி அங்கிருந்த 40 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது.
தகவலின் பேரில், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் பி.வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு படையினர் சென்று கிணற்றில் இறங்கி, கயிறு மூலம் கட்டி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.