திருப்பூரில் மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்
திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின் வாரிய ஊழியர்கள் 700க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின் வாரிய ஊழியர்கள் 700க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யாமல் மின்வாரியப் களப் பணிகளை தனியாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு 82 ஐ திரும்பப்பெறக்கோரி திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கள் அறிவித்திருந்தன.
இதன்படி திருப்பூர், மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு தொழிற்சங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.