முகப்பு
திருப்பூர்

பல்லடத்தில் மின் வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்

பல்லடத்தில் மின் வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பல்லடத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய தொழிற்சங்கத்தினர்.
பகிர்:

பல்லடத்தில் மின் வாரிய தொழிற்சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் பல்லடம் மின் பகிர்மான வட்டக்கிளை சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
தமிழகத்தில் மின் வாரியத்தில் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரு.380 ஊதியம் அளித்து பணி வழங்கிட வேண்டும்.
 மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் பல்லடம் மின்பகிர்மான வட்ட கிளை பொருளாளர் ஜான்சன் சாமுவேல் தலைமை வகித்தார். 
இதில் அச்சங்கத்தின் பல்லடம் கிளைத் தலைவர் அங்குராஜ், செயலாளர் கந்தசாமி, ராமசந்திரன் (ஐக்கிய சங்கம்), ராமலிங்கம்(சி.ஐ.டி.யு), உத்திரகுமார்(தொ.மு.ச.), சுரேஷ்ராஜ்(பொறியாளர் சங்கம்), முத்துசாமி(சம்மேளனம்) மற்றும் பல்லடம், காங்கேயம், தாராபுரம் மின் வாரிய அலுவலகங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →