சேவூர் அருகே சிறுமியை விட்டுச் சென்ற தாய் மீட்பு
சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் சிறுமியை விட்டு சென்ற தாய் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம் குப்பைக் கிடங்கு மையத்தில் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் சிறுமியை விட்டு சென்ற தாய் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே தண்டுக்காரம்பாளையம், புளியம்பட்டி சாலையில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது. இந்நிலையில் இங்கு வெள்ளிக்கிழமை மதியம் உடலில் காயங்களுடன் மயக்க நிலையில் 6 வயது மிக்க சிறுமியை பொதுமக்கள் மீட்டு, காவல் துறை உதவியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து அருகில் இருந்த சிசிடிவி பதிவு மூலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை ஒரு பெண் விட்டுச் சென்றது தெரியவந்தது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு தண்டுக்காரம்பாளையத்திலேயே அப்பெண்ணும் பொதுமக்களிடம் பிடிபட்டார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில், அப்பெண் கர்நாடக பெங்களூரூ, தியாகதேனாஹல்லி பகுதியைச் சேர்ந்த சர்மிளாகுமாரி(எ)சைலஜாகுமாரி (39). மருத்துவர் என்பதும், இவரது கணவர் தர்மபிரசாத் (42) உடன் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இவர்களது மகள் கைரா(5) தியாகதேனா ஹல்லி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.சி.படித்து வரும் தெரியவந்தது. மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த சைலஜாகுமாரிக்கு, கரோனா பொதுமுடக்கத்தால் தொழில் நலிவடைந்ததால், திருப்பூர் நோக்கி பேருந்தில் வந்துள்ளதுள்ளார்.
இதற்கிடையில் மனமுடைந்த சைலஜாகுமாரி சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையத்தில் இறங்கி கையில் வைத்திருந்த சளி மருந்து முழுவதையும் மகளுக்கு கொடுத்து படுக்க வைத்து விட்டு, தப்பிச் சென்று, கையில் கொண்டு வந்திருந்த விஷத்தையும் அருந்தி தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார்.
இதற்கிடையில் பொதுமக்களிடம் பிடிபட்டதால், சைலஜாகுமாரி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.