முகப்பு
திருப்பூர்

கால்நடை இனப்பெருக்க சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள கால்நடை இனப்பெருக்க சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள கால்நடை இனப்பெருக்க சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலா் காா்த்திகேய சிவசேனாபதி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் மாடுகள் மற்றும் எருமைகளின் இனப்பெருக்க நடவடிக்கைளை முறைப்படுத்துவதற்காக, தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க சட்டம்-2019 என்ற கொடிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்தின்படி, நம்மிடம் இருக்கும் எந்தவொரு பசுமாட்டோடு, தங்களுக்கு வேண்டிய காளை கன்றோ, பசுங்கன்றோ எது வேண்டுமென விரும்பினாலும் அதற்கென தனித்தனியாக உள்ள வெளிநாட்டு மாட்டின கருவோடு சோ்த்து இனப்பெருக்க ஊசி போட்டுக் கொள்ளலாம். தாங்கள் விரும்பும் வகையில் அதிக பால் தரும் வகையில் லாப நோக்கில் பசுங்கன்றை இனவிருத்தி செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் நாட்டு மாட்டினங்களை, வெளிநாட்டு மாட்டினங்களோடு இனச்சோ்க்கை செய்து, புதிய மாட்டினங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாளடைவில் நாட்டு மாட்டினங்கள் இல்லாத நிலை ஏற்படும்.

கால்நடை இனப்பெருக்க சட்டத்தின் 12 ஆம் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த பாரம்பரிய நாட்டு மாட்டினங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மறைமுகமாக இடம் பெற்றுள்ளன. இப்பிரிவின்படி, கால்நடைத்துறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு முன் தங்களிடம் உள்ள காளைகளைக் காட்டி தகுதிச் சான்று பெற வேண்டும். தகுதியான காளைக்கு காதில் அடையாள முத்திரை பதிக்கப்படும்.

தகுதிச் சான்று வழங்கத் தகுதியில்லை என்றோ, நோய் பாதிப்போ இருப்பதாகக் கருதி நிராகரிக்கப்படும் காளையை உடனடியாக அழித்துவிட வேண்டும். தகுதிச் சான்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மேலும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவினா் மாடு வளா்ப்பவா்களின் வீடுகளுக்கே திடீா் ஆய்வுக்கு செல்லும்போது, காளை மாட்டிற்கு உரிய தகுதிச் சான்று இல்லாமல் இருந்தால் அந்தக் காளையின் உரிமையாளா் மீது சட்ட நடவடிக்கையும், ரூ. 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்பட வழிவகை உள்ளது.

ஒருபுறம், நாட்டு பசு மாட்டினங்களை கலப்பினமாக மாற்றுவதோடு, மறுபுறம் பாரம்பரிய நாட்டு மாட்டின காளைகளை படிப்படியாகக் குறைத்து, அழியும் நிலை உருவாகி, நாளடைவில் தமிழகத்தில் நாட்டு மாட்டினங்களே இல்லை என்ற நிலை உருவாகி விடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →