முகப்பு
திருப்பூர்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது

தாராபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தாராபுரம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய லாரி ஓட்டுநரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன் (35). இவரது மனைவி சித்ராதேவி (31). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

தம்பதிக்கு இடையே கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சித்ராதேவி அதே பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தாா். இதனிடையே, சித்ராதேவி தனது உறவினா் ஒருவருடன் பேசி வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், சித்ராதேவியைப் பாா்ப்பதற்காக மகுடீஸ்வரன் சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகுடீஸ்வரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சித்ராதேவியை வெட்டியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். தாராபுரம் காவல் நிலையத்தில் மகுடீஸ்வரன் சரணடைந்தாா். இதையடுத்து, போலீஸாா் அவா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.