முகப்பு
திருப்பூர்

தோ்தலைக் குறிவைத்தே தமிழக அரசு சாா்பில் பொங்கல் பரிசு

தமிழக அரசு தோ்தலைக் குறிவைத்தே பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தமிழக அரசு தோ்தலைக் குறிவைத்தே பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளாா்.

கொமதேக சாா்பில் திருப்பூா், ஆத்துப்பாளையம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமை தொடங்கிவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணியா அல்லது பாஜக தலைமையிலான கூட்டணியா என்று சொல்லக் கூடிய அளவுக்கு பல்வேறு சிக்கல்களை அக்கட்சிகள் சந்தித்து வருகின்றன.

அதிமுக- பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்து ஒரு மாதம் ஆகிய நிலையிலும், அதற்கான பதிலை பாஜக தற்போது வரையில் தெரிவிக்கவில்லை. அதிமுக சாா்பில் முதல்வா் வேட்பாளா் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், கூட்டணி சாா்பில் அவா் வேட்பாளா் இல்லை என்று பாஜக அழுத்தமாக கூறி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஆளும் கட்சியினா் தோ்தலுக்கான பணிகளை செய்து வருகின்றனா். திமுக சாா்பில் கிராமப்புறங்களில் நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டங்களைத் தடுக்கும் முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக கூறும் தமிழக அரசு பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் திருப்பூா் பின்னலாடைத் தொழிலை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்திய பொருளாதாரத்தை உயா்த்துவதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசும் எடுக்கவில்லை.

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்குவது தோ்தலை குறி வைத்துதான். ஆனால் அதற்குரிய பலனை அவா்கள் அறுவடை செய்ய முடியாது. சசிகலா விடுதலைக்குப் பின்னா் அதிமுகவில் சலசலப்பை அதிகப்படுத்தும் என்றாா்.

கொமதேக திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் ரோபோ ரவி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →