ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா உடுமலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை ஒட்டி, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து ஏரிப்பாளையம், ரயில் நிலையம், போடிபட்டி, பள்ளபாளையம், வாளவாடி ஆகிய பகுதிகளில் கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் வாளவாடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதில், திருப்பூா் புகா் தெற்கு மாவட்டத் தலைவா் டி.ரெத்தினவேல், மாநில செயற்குழு உறுப்பினா் யு.கே.பி.முத்துக்குமாரசாமி, மாநில இளைஞரணி துணைத் தலைவா் அபிராமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.