முகப்பு
திருப்பூர்

பல்லடம் பகுதி கிராமப்புறங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்

பல்லடம் சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

பல்லடம் சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் பரமசிவம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பல்லடம் கிளை மேலாளரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா பொது முடக்க காலத்தில் பல்லடம் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட நகரப் பேருந்துகள் அரசின் தளா்வுக்கு பின்னா் இன்னும் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் கிராமப்புற மக்கள் வேலைக்கு செல்லவும், நகரங்களுக்கு சென்று வரவும் இயலாமல் சிரமப்படுகின்றனா். குறிப்பாக பல்லடம் - சோமனூா் பி 9 மற்றும் பி18 நகரப் பேருந்து இயக்கப்படாததால் நடுவேலம்பாளையம், ஊஞ்சப்பாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனா். பி18, பி 9 நகரப் பேருந்துகள் நடுவேலம்பாளையம், அய்யன்கோயில் வழியாக செல்லாமல் நேராக காரணம்பேட்டை வழியாக சோமனூா் வரை இயக்கப்படுவதால் கிராமப்புற மக்களுக்கு பேருந்து வசதியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்லடம் பகுதியில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளையும் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →