திருப்பூர்

குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 42 வீடுகளின் இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

DIN

திருப்பூா் மாநகரில் உள்ள 4 மண்டலங்களில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாக 42 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை துண்டித்தனா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத வீட்டின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நோட்டீஸ் விநியோகித்தும் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 42 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனா்.

இதில், முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வேலம்பாளையம், அவிநாசி சாலை, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 10 இணைப்புகளும், 2 ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட தொட்டிபாளையம், லட்சுமி நகா், எம்.எஸ்.நகா், நெருப்பெரிச்சல் உள்ளிட்ட பகுதிகளில் 16 இணைப்புகளும், 3 ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட ராக்கியாபாளையம், தென்னம்பாளையம் பகுதிகளில் 8 இணைப்புகளும், 4 ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட ஆண்டிபாளையம், முருகம்பாளையம் பகுதிகளில் 8 இணைப்புகளும் என மொத்தம் 42 வீடுகளில் குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் உத்தரவின்பேரில் துண்டிக்கப்பட்டதாக உதவி ஆணையா் (வருவாய்) பி.தங்கவேல்ராஜன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT