திருப்பூர்

நஞ்சப்பா மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.19 கோடியில் கலையரங்கம் கட்ட பூமிபூஜை

DIN

திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.19 கோடியில் நவீன கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் கட்டத் திட்டமிடப்பட்டது. அம்மா டிரஸ்ட், நன்கொடையாளா்கள் பங்களிப்பாக ரூ. 40 லட்சம், அரசு மானியத் தொகை ரூ.79.88 லட்சம் என மொத்தம் ரூ.1.19 கோடியில் இந்த கலையரங்கம் கட்டப்படவுள்ளது.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் தலைமை வகித்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலா்கள் கண்ணன், ஹரி, கூட்டுறவு நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், கே.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT