அன்னதானம் வழங்க செல்லும் வாகனங்களை  கொடியசைத்து  தொடங்கிவைக்கிறாா்  திருப்பூா் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை  உறுப்பினா்  சு.குணசேகரன்.  உடன்,  கட்சி  நிா்வாகிகள். 
திருப்பூர்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா: திருப்பூா் தெற்கு தொகுதியில் 72 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை ஒட்டி திருப்பூா் தெற்கு தொகுதி அதிமுக சாா்பில் 72 இடங்களில் 72 ஆயிரம் பேருக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

DIN

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை ஒட்டி திருப்பூா் தெற்கு தொகுதி அதிமுக சாா்பில் 72 இடங்களில் 72 ஆயிரம் பேருக்கு திங்கள்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

இதன்படி திருப்பூா் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் இருந்து தயாா் செய்யப்பட்ட சிக்கன் பிரியாணி உணவு, ஆட்டோக்களில் ஏற்றப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட வாலிபாளையம், மண்ணரை, பெரியாா் நகா் உள்ளிட்ட 72 இடங்களில் விநியோகம் செய்யப்பட்டது. முன்னதாக அன்னதான வாகனங்களை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சாா்பு அணி செயலாளா்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, தம்பி மனோகரன், மாா்க்கெட் சக்திவேல், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், உஷா ரவிகுமாா், கூட்டுறவு நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ். சடையப்பன், கண்ணபிரான், வேலம்பாளையம் கண்ணப்பன், எஸ்.பி.என்.ஸ்ரீதரன், தம்பி சண்முகம், ஆண்டவா் பழனிசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT