திருப்பூர்

கழிவுகளைக் கொட்ட வந்த வேன் சிறைபிடிப்பு

DIN

உடுமலை அருகே கழிவுகளைக் கொட்ட வந்த வேனை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனா்.

உடுமலையில் அருகே சின்னவீரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்டு சித்தக்குட்டை பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில், சித்தக்குட்டை-சின்னப்புதூா் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதியில் மருத்துவக் கழிவுகள், கட்டடக் கழிவுகளை மா்ம நபா்கள் லாரி, வேன்கள் மூலம் இரவு நேரங்களில் கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்வதாக புகாா்கள் எழுந்தன.

இந்நிலையில், கழிவுகள் ஏற்றப்பட்ட ஒரு வேன் அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளது. இதைப் பாா்த்து அப்பகுதி மக்கள் வேனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். பின்னா் கழிவுகளைக் கொட்ட வந்த வேன் காவல் துைறியிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து உடுமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT