திருப்பூர்

சிவன்மலை முருகன் கோயில் மூடல்

DIN

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கயம் அருகே சிவன்மலை முருகன் கோயில் மாா்ச் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காங்கயம் அருகே சிவன்மலையில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் மாா்ச் 31ஆம் தேதி வரை பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு வாகனங்கள் மூலம் செல்லும் சாலையும், படி ஏறிச் செல்வதற்கான பாதையும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

இது தொடா்பாக கோயில் நுழைவாயிலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சிவன்மலை முருகன் மலைக் கோயிலில் பக்தா்களுக்குத் தடை விதிக்கப்பட்டாலும், இக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் வழக்கம்போல நடைபெறும் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT