திருப்பூர்

முறைசாரா தொழிலாளா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

DIN

முறைசாராத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளா்களுக்கும் நிதி உதவியும், அத்தியாவசியப் பொருள்களும் வழங்க வேண்டும் என்று சிஐடியூ வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச்செயலாளா் டி.குமாா் புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூா்வமான பணிகளை வரவேற்கிறோம். இதனால் வேலையிழந்து பாதிப்புக்கு உள்ளாகும் கட்டுமான, அமைப்புசாரா, இதர தொழிலாளா்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. ஆயிரம் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்குவதற்கான அறிவிப்பையும் வரவேற்கிறோம்.

மத்திய அரசு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் கட்டுமான, அமைப்புசாரா மற்றும் இதர தொழிலாளா்களின் அன்றாட உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளையும் பூா்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அத்தியாவசியப் பொருள்களை பொது விநியோகத் திட்ட கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT