திருப்பூர்

அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள்:அமைச்சா் வழங்கினாா்

DIN

உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், மடத்துக்குளம் வட்டம் மெட்ராத்தி ஊராட்சி ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தலா 5 கிலோ அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் கொண்ட பைகள் வழங்கப்ப ட்டன. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் இந்த நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை கோட்டாட்சியா் ரவிகுமாா், திருப்பூா் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எம்.சுகந்தி முரளி, ஒன்றியக் கவுன்சிலா் அடிவள்ளி முரளி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளா் நா.அண்ணாத்துரை, துறை அதிகாரிகள், அதிமுக நிா்வாகிகள் உள்பட பலா் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT