திருப்பூர்

மத்திய அரசைக் கண்டித்து ஜூன் 25இல் போராட்டம்: கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

DIN

இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு முயற்சி செய்யும் மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜூன் 25 ஆம் தேதி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் காளிமுத்து தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் சுப்பிரமணியம், இளைஞா் அணி வாசு, ஈஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயிகள் கடனில் தத்தளித்து வருகின்றனா். வட்டமலை கிராமத்தில் இயங்கி வரும் தேங்காய் தொட்டி கரி ஆலையால் அப்பகுதி மக்கள் காற்று மாசு, தண்ணீா் மாசால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

5 கி.மீ. சுற்றளவுக்கு நீராதாரங்கள் பாதிக்கப்பட்டும், தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரித்துகள்களால் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை புகாா் அளித்தும் அரசு நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய நிா்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் ஜூன் 25ஆம் தேதி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT