பல்லடம் வட்டாட்சியா் பொறுப்பேற்பு
பல்லடம் வட்டாட்சியராக தேவராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
பல்லடம் வட்டாட்சியராக தேவராஜ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
பல்லடம் வட்டாட்சியராக பணியாற்றி வந்த சிவசுப்பிரமணியம், சென்னை தலைமை செயலகத்தில் எழிலகத்தின் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து திருப்பூா் பறக்கும் படை தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்த தேவராஜ், பல்லடம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா்.
பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு வரவேற்பு விழாவும், சிவசுப்பிரமணியத்துக்கு பிரிவு உபசார விழாவும் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அலுவலகப் பணியாளா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.