முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவிநாசியில் வெள்ளிக்கிழமை மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
அவிநாசி ஆட்டையாம்பாளையம் சந்திப்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவிநாசியில் வெள்ளிக்கிழமை மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவிநாசி ஆட்டையாம்பாளையம் நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்,பி.வேலுமணி அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓ.கே.சின்ராஜ், ஆறுக்குட்டி, அவிநாசி அதிமுக ஒன்றிய செயலாளர் சேவூர் ஜி.வேலுசாமி(வடக்கு), ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் அ.ஜெகதீசன், அவிநாசி நகர அதிமுக துணைச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதில் ஜண்டை மேளாம் முழங்க தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வரேவற்பளித்தனர். குறிப்பாக மகளிரணியினர் ஒரே மாதிரி சிருடை அணிந்து ஆரார்த்தி எடுத்தனர். இதையடுத்து முதல்வர், காரின் மீது நின்று கை அசைத்தும், அனைத் தரப்பினரிடமிருந்தும் பூங்கொத்து, பொன்னடை உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொண்டும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →