திருப்பூர்

தலித் விடுதலைக் கட்சி அலுவலகம் முன் தீப்பிடித்து எரிந்த சரக்கு ஆட்டோ

DIN

அவிநாசி ராஜாஜி வீதியில் தலித் விடுதலைக் கட்சி அலுவலகம் முன் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ திங்கள்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ராஜாஜி வீதியில் தலித் விடுதலைக் கட்சி என்ற கட்சியின் தலைமை அலுவலகம் உள்ளது. இக்கட்சி நிறுவனத் தலைவராக அவிநாசியைச் சேர்ந்த எம்.பி.செங்கோட்டையன் இருந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான சரக்கு ஆட்டோ வாகனத்தை, ஓட்டுநர் ராஜ்குமார் என்பவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்சி அலுவலகம் முன் நிறுத்தி சென்றுள்ளார். 

திடீரென திங்கள்கிழமை அதிகாலை கட்சி அலுவலகம் முன் நிறுத்தியிருந்த சரக்கு ஆட்டோ தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு மணிகண்டன் என்பவர் வந்து பார்த்த போது, ஆட்டோ, அலுலவலக ஜன்னல் உள்ளிட்டவை எரிந்து கொண்டிருந்துள்ளது. தகவலறிந்து வந்த அவிநாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT