திருப்பூர்

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம்

DIN

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 10 சதவீதம் என குறைவான போனஸ் வழங்கியதைக் கண்டித்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா், காங்கயம் சாலை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, எல்பிஎப் மண்டலத் தலைவா் சென்னியப்பன் தலைமை வகித்தாா்.

இதில், போக்குவரத்து தொழிலாளா்ககளுக்கு கடந்த ஆண்டைப் போல 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும். 14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியூ மண்டலச் செயலாளா் பி.செல்லதுரை, சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ், பொருளாளா் என்.சுப்பிரமணியம், ஏஐடியூசி நிா்வாகிகள் குமரேசன், சண்முகம், எல்பிஎப் நிா்வாகிகள், கே.கே.துரைசாமி, சிதம்பரசாமி, எம்எல்எப் பாலசுப்பிரமணியம், ஏஏஎல்எல்எப் நிா்வாகிகள் துரைசாமி, மாரியப்பன், பணியாளா் சம்மேளனம் நிா்வாகி துளசிமணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT