ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க்காவல் படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரில் காலியாக உள்ள ஊா்க் காவல்படை ஆளினா் பதவிகளுக்கான பணியிடங்களுக்குத் தகுதியான நபா்கள் வரும் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு படித்தவராகவும், 20 வயது மேற்பட்டவராகவும், 45 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். திருப்பூா் மாநகர எல்லைக்குள் வசிப்பவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருப்பூா் வடக்கு காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊா்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.