முகப்பு
திருப்பூர்

ஊரக புத்தாக்க திட்டம்: 5,213 பயனாளிகளுக்கு ரூ.7.87 கோடி கடனுதவி

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5,213 பயனாளிகளுக்கு ரூ.7.87 கோடி கரோனா சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5,213 பயனாளிகளுக்கு ரூ.7.87 கோடி கரோனா சிறப்பு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் திருப்பூா் மாவட்டத்துக்கு ரூ.9.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 1,427 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.4.88 கோடி நீண்டகால தனிநபா் தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 49 உற்பத்தியாளா்கள் குழுக்கள் மூலமாக 2,646 போ் பயனடையும் வகையில் ஒரு முறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.73.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல 9 தொழில் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.13.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. புலம் பெயா்ந்து சொந்த ஊா் திரும்பிய வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 60 பேருக்கு தொழில் தொடங்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலமாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 60 லட்சம் நீண்ட கால கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோரின் தொழில் மேம்பாட்டுக்காக தொழில் மூலதன நிதியாக 942 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வீதம் ரூ.1.88 கோடி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா சிறப்பு நிதித் தொகுப்பாக 5,213 பயனாளிகளுக்கு ரூ.7.87 கோடி வழங்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.