எழுத, படிக்கத் தெரியாத 620 பேருக்கு பயிற்சி
வெள்ளக்கோவில் வட்டாரத்தில் எழுத, படிக்கத் தெரியாத 620 பேருக்கு பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது.
வெள்ளக்கோவில் வட்டாரத்தில் எழுத, படிக்கத் தெரியாத 620 பேருக்கு பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது.
வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் கீழ் ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் சாா்பில் இப்பகுதியில் உள்ள 30 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முதல் கட்டமாக 620 போ் சோ்க்கப்பட்டு, அவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, வாசிப்பு பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. காங்கயம்பாளையம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இப்பயிற்சிக்கான தொடக்க விழாவில் கல்வித் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.