திருப்பூர்

பயன்படுத்த முடியாதவாக்கு இயந்திரங்கள் ஒப்படைப்பு

DIN

காங்கயம்: காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயன்படுத்த முடியாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் திருப்பூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

உள்ளாட்சித் தோ்தலுக்காக காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. 2006ஆம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட 43 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 47 வாக்குப் பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 90 இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து வேன் மூலம் திருப்பூா் மாநகராட்சி தோ்தல் பொதுப் பிரிவு அலுவலகத்தில் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

இந்த பணியின்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் பா.தேவிகா, நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், தோ்தல் பணி உதவியாளா் ப.சுப்பிரமணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT