திருப்பூர்

உடுமலை கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி உடுமலை கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள், விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

உடுமலை ஊராட்சி ஒன்றியம், கண்ணம்மநாய்க்கனூா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் ஆகியோா் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்பதாகவும், ஏழை மக்கள் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு வந்தால் அவா்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் கூறினா். ஆனால் இதுகுறித்து அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகி றது. இந்நிலையில் இந்த கிராம நிா்வாக அலுவலா் மற்றும் உதவியாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள், விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் வருவாய்க் கோட்டாட்சியரின் தனி உதவியாளரிடம் பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT