பல்லடம்: சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசை வழிபாடு
பல்லடம் சித்தம்பலம் நவகிரககோட்டை கோளறுபதி சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசையொட்டி யாக வேள்வி சிறப்பு பூஜை ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் நவகிரககோட்டை கோளறுபதி சிவன் ஆலயத்தில் புரட்டாசி அமாவாசையொட்டி யாக வேள்வி சிறப்பு பூஜை ஆகியன வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதனை கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் நடத்தி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து முகக்கவசம் அணிந்து பங்கேற்று வழிபட்டனர்.