திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 3ஆவது நாளாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

DIN

திருப்பூர் மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள ரெட்டிபாளையம் பிரிவு, தாராபுரம் வட்டம் ஆலாம்பாளையம் ஆகிய இடங்களில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். இந்நிலையில், விவசாயிகளின் தொடர் காத்திருப்புப் போராட்டம் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. 

இதில், ரெட்டிபாளையம் பிரிவில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 750 கிலோ வாட் மின் திட்டத்தை விளை நிலங்களில் வழியாக செயல்படுத்தக்கூடாது. மத்திய, மாநில அரசுகளின் அனுமதியைப் பெறாத தனியார் கார்ப்பரெட் நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள முன்நுழைவு அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

காவுத்தம்பாளையம் ஏரி ஆயக்காட்டு நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்கக்கூடாது என்றனர். இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

மதுரை அருகே பெண் காவல் ஆய்வாளா் வீட்டில் 450 பவுன் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT