திருப்பூர்

ஊழியருக்கு கரோனா: டாஸ்மாக் கடை மூடல்

DIN

திருப்பூா்: திருப்பூா் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அந்தக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன்படி கடந்த திங்கள்கிழமை வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,938 ஆக உள்ளது.

இந்த நிலையில், திருப்பூா் தென்னம்பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் 43 வயது நபா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக புதுக்கோட்டை சென்றுள்ளாா். இதன் பிறகு இரு நாள்களுக்கு முன்னா் பணிக்குத் திரும்பிய அவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனிடையே, தென்னம்பாளையம் டாஸ்மாக் கடையில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். மேலும், கடையில் பணியாற்றி வரும் இருவருக்கு பரிசோதனை நடத்தியதுடன், செவ்வாய், புதன்கிழமை என 2 நாள்களுக்கு டாஸ்மாக் கடையை மூடவும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT